Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மைத்திரியும், ரணிலும் மீண்டும் சந்தித்துப் பேச்சு!

பரபரப்பில் கொழும்பு அரசியல்!!

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே தற்போது அவசர சந்திப்பொன்று நடைபெற்று வருகின்றது.

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்ற பின்னர் அரச தலைவரும், தலைமை அமைச்சரும் ஏற்கனவே இரு தடவைகள் சந்தித்துப் பேசியுள்ள நிலையில் மூன்றாவது தடவையாகவும் தற்போது சந்தித்துப் பேசுகின்றனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் பின்னடைவைச் சந்திருந்தின. மகிந்த ராஜபக்சவின் ஆதரவு அணி பெரும் எழுச்சியைச் சந்தித்திருந்திது.

இதனால் அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சருக்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அரச தலைவர் இல்லத்தில் நடைபெற்றுவரும் சந்திப்பில் மங்கள சமரவீர, கபீர் ஹாசீம், ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரும் பங்கேற்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கருதப்படுவதால் கொழும்பு அரசியல் பரபரப்பாகியுள்ளது.