Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சிவராத்திரி நாளில் கட­வுள் சிலை­கள் உடைப்பு!!

மன்­னா­ரின் மூன்று இடங்­க­ளில் இந்­துக்­க­ளின் கட­வுள் சிலை­கள் உடைத்­துச் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 3 சிலை­கள் திரு­டப்­பட்­டுள் ளன. இந்­துக்­கள் சிவ­ராத்­திரி விர­தத்தை நேற்­றுக் கடைப்­பி­டித்த நிலை­யில் இந்த விச­மச் செயல்­கள் செய்­யப்­பட்டன.

இந்­தச் சம்­ப­வங்கள் நேற்­று­முன்­தி­னம் நடந்­துள்­ளது. மன்­னார் – தலை­மன்­னார் பிர­தான வீதி­யில் 1988 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் இந்­திய இரா­ணு­வத்­தால் அமைக்­கப்­பட்ட ‘லிங்­கேஸ்­வ­ரர்’ ஆல­யத்­தில் காணப்­பட்ட மூன்று சிலை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன.

மன்­னார் – தாழ்­வு­பாடு பிர­தன வீதி, கீரி சந்­தி­யில் கடந்த 18 வரு­டங்­க­ளாக காணப்­பட்ட ஆலை­யடி பிள்­ளை­யார் சிலை இனம் தெரி­யாத நபர்­க­ளி­னால் உடைத்து சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மன்­னார் – தள்­ளாடி விமான ஓடு பாதைக்கு முன்­பாக பல தட­வை­கள் அடை­யா­ளம் தெரி­யாத நபர்­க­ளால் உடைக்­கப்­பட்ட நிலை­யில், மீண்­டும் புதி­தாக அமைக்­கப்­பட்ட பிள்­ளை­யார் சிலை அங்­கி­ருந்து திரு­டிச் செல்­லப்­பட்­டுள்­ளது.

நேற்று மகா சிவ­ராத்­திரி விர­தம் கடைப்­பி­டிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் பூர்த்­தி­யாகி இருந்த நிலை­யில் நடந்­துள்ள இந்­தச் சம்­பங்­கள் மக்­கள் மத்­தி­யில் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சம்­ப­வங்­கள் தொடர்­பில் மன்­னார் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. மன்­னார் பொலி­ஸார் சம்­பவ இடங்­க­ளுக்­குச் சென்று விசா­ர­னை­களை மேற்­கொண்­ட­னர்.