தமிழ் கட்சிகளின் மோதலால் தெற்குக் கட்சிகள் ஊடுருவல்!!

சிறிகாந்தா சுட்டிக்காட்டு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆகிய தமிழ்த் தேசி­யத்தை வலி­யு­றுத்­தும் கட்­சி­கள் வடக்கு -– கிழக்­கில் ஒன்­றுக்­கொன்று மோதிய சூழ­லில், தென்­னி­லங்கை பேரி­ன­வா­தக் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இங்கு ஊடு­ருவி விட்­டன. இது ஆபத்­தா­ன­தும் கவ­லைக்­கு­ரி­ய­து­மா­கும். நாம் ஒற்­று­மை­யாக இருந்­த­போது கன­வி­லும் நடை­பெ­றாத விட­யம், இன்று நடை­பெற்­றுள்­ளது.

இவ்­வாறு ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறீ­காந்தா தெரி­வித்­தார்.யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது-,

நாம் இந்த விட­யத்­தில் அசி­ரத்­தை­யாக இருக்க முடி­யாது. இந்­தத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பின்­ன­டை­வைச் சந்­தித்­துள்­ளது. இது கவ­லைக்­கு­ரிய விட­யம். குறு­கிய நலன்­க­ளுக்­காக மத­வா­தம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டது. யாழ்ப்­பாண நக­ரில் இந்­தக் கருத்து தொடர்ச்­சி­யா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

எமது தேர்­தல் பரப்­பு­ரை­கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்டு சரி­யாக நடந்­தி­ருந்­தால் கணி­ச­மான வாக்கை தக்க வைத்­தி­ருக்க முடி­யும். நாம் இறு­திப் பத்து நாள்­க­ளி­லே­ளேய எமது பரப்­பு­ரை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருந்­தோம். இது­வும் எமது பின்­ன­டை­வுக்கு கார­ணம்.

உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் நாம் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற சபை­க­ளில் இரண்­டாம் நிலை­யில் உள்­ள­வர்­கள் வேறு யாரு­டன் கூட்டு வைத்தோ அல்­லது எம்­மில் ஓரி­ரு­வரை வளைத்தோ ஆட்சி அமைக்க முடி­யாது. அது நட­வாது. அதற்கு இட­ம­ளிக்க மாட்­டோம் – என்­றார்.

You might also like