Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஒன்றிணையா விடில் மக்கள் தண்டிப்பர்!!

நாங்­கள் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டா­விட்­டால் மக்­க­ளால் தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டிய நிலை ஏற்­ப­டும். அதை மன­தில் இருத்­திச் செயற்­ப­ட­வேண்­டும்.

இவ்­வாறு ரெலோ அமைப்­பின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார்.  யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.அவர் தெரி­வித்­த­தா­வது-,

இந்த அரசு வடக்கு – கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கு ஈழத்­தைக் கொடுக்­கப் போகின்­றது என்று மகிந்த தெற்­கில் கூறி­ய­தால் அந்த மக்­கள் ஒன்­றி­ணைந்து வாக்­க­ளித்­துள்­ள­னர். வடக்கு – கிழக்­கில் தமிழ்த் தேசி­யக் கட்­சி­கள் பிரிந்து நின்­ற­மை­யால் ஆட்சி அமைக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

நாங்­கள் ஒற்­று­மை­யாக ஒன்­றி­ணைந்து செயற்­ப­டா­விட்­டால் தமது செயற்­பாடு வித்­தி­யா­ச­மாக இருக்­கும் என்று தமிழ் மக்­கள் உணர்த்­தி­யுள்­ள­னர். இதனை நாம் எச்­ச­ரிக்­கை­யாக எடுத்­துச் செயற்­பட வேண்­டும் – என்­றார்.