Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அர­சி­யல் குழப்­பங்­கள்: இன்று முடிவு தெரி­யும்!!

கொழும்பு அர­சில் ஏற்­பட்­டுள்ள குழப்­பங்­க­ ளுக்கு இன்று முடிவு கிடைக்­கும் என்று அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பேசப்­ப­டு­கின்­றது. கூட்டு அரசு தொட­ருமா?, தலைமை அமைச்­சர் பத­வி­யில் ரணில் தொடர்­வாரா?, ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்சி அமைக்குமா ? என்ற கேள்­வி­க­ளுக்கு இன்று பதில் கிடைக்­கும் என்று அந்த வட்­டா­ரங்­கள் குறிப்­பிட்­டன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அந்­தக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளுக்­கும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் இடை­யில் நேற்று இரவு நடை­பெற்ற மிக  முக்­கி­ய­மான சந்­திப்­பில் பொது இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளு­டன் இன்று கலந்­து­ரை­யா­டல் நடத்­திய பின்­னர் இறுதி முடிவு எடுப்­பது என்று புரிந்­து­ணர்வு காணப்­பட்­டுள்­ளது.

இன்று நடை­பெ­றும் கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னரே, கொழும்பு அர­சின் ஆட்­சியை யார் தொட­ரப் போகின்­றார்­கள் என்­பது வெளிச்­சத்­துக்கு வரும்.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் முடி­வு­க­ளும், மகிந்­த­வின் மீள் எழுச்­சி­யும், கொழும்பு அரசை ஆட்­டம் காணச் செய்­துள்­ளது. ஐ.தே.க, சு.க. இணைந்து அமைத்­துள்ள கூட்டு அர­சி­லி­ருந்து வெளி­யே­ற­வேண்­டும் என்று சு.கவி­னர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவை வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

கூட்டு அரசு தொடர்­வ­தா­யின் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வெளி­யேற்ற வேண்­டும் என்று அவர்­கள் கேட்­டுக் கொண்­டுள்­ள­னர்.

அதே­வேளை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைச் சந்­தித்த ஐக்­கிய தேசி­யக் கட்சி உறுப்­பி­னர்­கள், கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­தில் மாற்­றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் இரவு, அரச தலை­வ­ரின் இல்­லத்­துக்கு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சென்­றுள்­ளார். இதன்­போது தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து வில­கும் கடி­தத்­தை­யும் எடுத்­துச் சென்­றுள்­ளார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, பதவி வில­கி­னால் மீண்­டும் உங்­களை (ரணில்) நிய­மிக்க மாட்­டேன் என்று கூறி­யுள்­ளார். கரு ஜெய­சூ­ரி­யாவை நிய­மிப்­பேன் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

அவரை நிய­மிப்­ப­தன் ஊடாக சிங்­க­ளத் தீவி­ரத்­ தன்­மை­யா­ளர்­களை கட்­டுப்­ப­டுத்­த­லாம் என்­றும் தெரி­வித்­துள்­ளார். கட்­சி­யி­ன­ரு­டன் பேசி பதில் கூறு­வ­தா­கத் தெரி­வித்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பின்­வ­ரிசை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16பேர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேற்று மாலை சந்­தித்­த­னர். ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

அலரி மாளி­கை­யில் நேற்று மாலை 7 மணி­ய­ள­வில், ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டம் நடை­பெற்­றது. அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச மற்­றும் கரு ஜெய­சூ­ரியா இரு­வ­ரும், கட்­சி­யின் சம்­ம­தம் இல்­லா­மல் பத­வி­களை ஏற்­கோம் என்று குறிப்­பிட்­டுள்­ள­னர்.

தலைமை அமைச்­ச­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே தொட­ர­வேண்­டும் என்று இந்­தக் கூட்­டத்­தில் சக­ல­ரும் இணைந்து முடி­வெ­டுத்­துள்­ள­னர்.

இதனை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­குத் தெரி­யப்­ப­டுத்த, ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் ஐ.தே.கவி­னர் அரச தலை­வ­ரின் இல்­லத்­துக்­குச் சென்­ற­னர். இரவு 8.30 மணி­யி­லி­ருந்து 10 மணி வரை­யில் சந்­திப்பு நடை­பெற்­றுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளை­யும் அழைத்து நாளை (இன்று) சந்­திப்பு நடத்­து­வது என்­றும், அதன் பின்­னர் இறுதி முடிவு எடுப்­பது என­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டை­யில், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, சு.க மூத்த அமைச்­சர் நிமல் சிறி­பால டிசில்­வாவை தலைமை அமைச்­ச­ராக்­கி­னால் தமது அணி­யி­னர் ஆத­ரவு வழங்­கு­வார்­கள் என்று அரச தலை­வ­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று அறி­ய­மு­டி­கின்­றது.