Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கஜேந்திர குமாரின் கருத்து அரசியல் நாகரிகமற்றது!!

சிறிகாந்தா கூறுகின்றார்

சம்­பந்­தன், சுமந்­தி­ரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட வேண்­டும் என்று கஜேந்­தி­ர­கு­மார் கூறிய கருத்து அர­சி­யல் நாக­ரிக­மற்­றது. அவ­ரது முதிர்ச்சி­யின்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது.

இவ்­வாறு ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் கூறி­னார்.அவர் தெரி­வித்­த­தா­வது-,

தமிழ் மக்­க­ளும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் ஒரு­போ­தும் ஒற்­றை­யாட்­சியை ஏற்­க­வும் இல்லை. ஏற்­கப் போவ­தும் இல்லை. கூட்­ட­மைப்­பின் தலைமை வெளி­யே­றி­னால் இணை­யத் தயார் என்று கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் கூறிய கருத்து அர­சி­யல் நாக­ரீ­க­மில்­லா­தது. அவ­ரது முதிர்­சி­யின்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது.

நாங்­க­ளும் பதி­லுக்கு கூற­லாம். அவரை (கஜேந்­தி­ர­கு­மாரை) கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­னால் நாங்­கள் அவர்­க­ளு­டன் இணை­யத் தயார் என்று பதி­லுக்­குச் சொல்­ல­லாம் – என்­றார்.