Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கொழும்பு நெருக்கடியைத் தணிக்க அமெ., இந்தியா கடும் முயற்சி!!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­குப் பின்­னர் கொழும்பு அர­சி­ய­லில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­யைத் தணிப்­ப­தற்­கான முயற்­சி­யில் இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசாப்­பும், இந்­தி­யத் தூது­வர் தரண்­ஜித் சிங்­கும் நேர­டி­யா­கவே கள­மி­றங்­கி­யுள்­ள­னர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­ய­கர் கரு ஜெய­சூ­ரிய ஆகி­யோரை நேற்று தனித் தனி­யா­கச் சந்­தித்த இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வர் கேசாப், தற்­போ­தைய அர­சி­யல் நிலை­மையை சீர்­செய்ய கூட்­டாட்­சி­யின் இரண்டு தலை­வர்­க­ளும் புரிந்­து­ணர்­வு­டன் செயற்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

மாலை­தீ­வில் ஏற்­பட்­டுள்ள நில­மை­போல் இலங்­கை­யி­லும் ஓர் அர­சி­யல் நெருக்­கடி ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டா­தென்­பது அமெ­ரிக்­கா­வின் நிலைப்­பாடு என்று அமெ­ரிக்­கத் தூது­வர் தெரி­வித்­துள்­ளார்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேற்­றுக்­காலை அல­ரி­மா­ளி­கை­யில் சந்­தித்­துப் பேச்சு நடத்­திய இந்­தி­யத் தூது­வர் தரண்­ஜித் சிங், இலங்­கை­யின் தற்­போ­தைய அர­சி­யல் சூழ்­நிலை குறித்­தான இந்­தி­யா­வின் கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

தலைமை அமைச்­சர் ரணில் எதிர்­வ­ரும்­வா­ரம் இந்­தியா செல்­ல­வுள்ள நிலை­யில் அந்­தப் பய­ணம் குறித்­தும் இதன்­போது பேசப்­பட்­டுள்­ளது என்று அல­ரி­மா­ளிகை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

கொழும்­பில் தற்­போது எழுந்­துள்ள அர­சி­யல் நெருக்­கடி நிலைமை அர­சி­யல் தீர்வு முயற்­சி­க­ளில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­ வி­டக்­கூ­டும் என்று இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­கள் கவலை கொண்­டி­ருக்­கின்­றன என்று மூத்த இரா­ஜந்­தி­ரி­யொ­ரு­வர் நேற்­றி­ரவு தெரி­வித்­தார்.