Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வெற்­றி­பெற்ற சபை­க­ளில் புரிந்­து­ணர்­வோடு ஆட்சி!!

கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற சபை­க­ளில் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்­கும். ஏனைய தமிழ்க் கட்­சி­கள் அதற்­குத் தடை­யாக இருக்­கக் கூடாது. ஏனைய தமிழ்க் கட்­சி­கள் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற சபை­க­ளில் அவர்­கள் ஆட்சி அமைக்­க­லாம்.

அதற்கு கூட்­ட­மைப்புத் தடை­யாக இருக்­காது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பின் நேற்­றைய கூட்­டத்­தில் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

வர்த்­தக சங்­கம் மற்­றும் சிவில் அமைப்­புக்­க­ளின் கோரிக்­கை­களை கவ­னத்­தில் எடுத்து, இந்த நிலைப்­பாட்டை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்­துள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளின் முக்­கிய கூட்­டம் யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று நடை­பெற்­றது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்­கில் 32 சபை­க­ளில் யாருக்­கும் பெரும்­பான்மை இல்­லாத நிலை­யில், ஆட்சி அமைக்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

தொங்கு சபை­கள் அமைந்­தால், அவற்றை வினைத்­தி­ற­னாக முன்­னெ­டுத்­துச் செல்ல முடி­யாது. மக்­க­ளுக்கு சிறந்த சேவையை வழங்க முடி­யாத நிலமை ஏற்­ப­டும். இத­னைக் கருத்­தில் கொண்டு வர்த்­தக சங்­கம் மற்­றும் சிவில் அமைப்­புக்­கள், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி மற்­றும் காங்­கி­ரஸ் கட்­சி­க­ளி­டையே இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தீவி­ர­மான முயற்­சி­களை எடுத்­தி­ருந்­தன.

‘சபை­களை வினைத்­தி­ற­னான நடத்­து­வ­தற்­காக, கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற சபை­க­ளில் நாம் ஆட்சி அமைப்­போம். ஏனைய தமிழ்க் கட்­சி­கள் அதற்­குத் தடை­யாக இருக்­கக் கூடாது. ஏனைய தமிழ்க் கட்­சி­கள் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற சபை­க­ளில் அவர்­கள் ஆட்சி அமைக்­க­லாம். அதற்கு நாம் தடை­யாக இருக்­க­மாட்­டோம்’ என்று கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­டது.