Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பங்­கா­ளி­யா­காது விட்­டா­லும் பகை­யா­ளி­யாக வேண்­டாம்!!

பங்­கா­ளி­க­ளாக இருக்­கா­விட்­டா­லும் பகை­யா­ளி­க­ளாக இல்­லா­மல் சபை­களை நடத்தி மக்­க­ளுக்­கான சேவை யைச் செய்ய வேண்­டும்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அங்­கத்­து­வக் கட்­சி­க­ளில் ஒன்­றான ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள தனி­யார் விடு­தி­யில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்­த­தா­வது:-

எந்­தக் கட்­சி­யும் தனித்து ஆட்சி அமைக்க முடி­யாத நிலை­யிலே அனைத்து சபை­க­ளின் தேர்­தல் முடி­வு­கள் காணப்­ப­டு­கின்­றன.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­னி­லை­யில் இருக்­கும் சபை­க­ளில் ஆட்சி அமைக்க தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, தமி­ழர் விடு­தலை கூட்­டணி என்­பன ஒத்­து­ழைப்புத் தர வேண்­டும்.

சாவ­கச்­சேரி நகர சபை, பருத்­தித்­துறை நகர சபை என்­ப­வற்­றில் முன்­னி­லை­யில் உள்ள தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி ஆட்சி அமைக்க தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கும்.

தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது நாங்­கள் ஒ­ரு­வர் மீது ஒரு­வர் குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­னோம். ஆனால் தேர்­த­லின் பின்­னர் மக்­க­ளுக்கு செய்ய வேண்­டிய கட­மை­களைச் செய்­வ­தற்கு ஒன்­று­பட வேண்­டும்.

பிரிந்து நின்ற எங்­க­ளுக்கு இந்­தத் தேர்­த­லில் மக்­கள் ஒரு ஆணை­யைத் தந்­துள்­ளார்­கள். அதனை ஏற்று செயற்­பட வேண்­டி­யது தமிழ் கட்­சி­க­ளின் கட­மை­யா­கும்– – என்­றார்.