Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மாம­னி­தர் சிவ­நே­ச­னின் நினைவு நிகழ்வு !!

யாழ்ப்­பாண மாவட்ட முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கி.சிவ­நே­ச­னின் 10ஆம் ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்வு நேற்று மல்­லா­வி­யில் உள்ள அவ­ரது நினை­வி­டத்­தில் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி மகா சிவ­ராத்­திரி தினத்­தன்று இலங்கை இரா­ணு­வத்­தின் ஆழ ஊடு­ரு­வும் படை­யி­ன­ரின் கிளை­மோர் தாக்­கு­த­லில் சிவ­நே­சன் உயி­ரி­ழந்­தார்.

நினை­வேந்­தல் நிகழ்­வில் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­கள் மற்­றும் தமிழ்­தே­சிய மக்­கள் முன்­ன­ணி­யின் செய­லா­ளர் செ.கஜேந்­தி­ரன் த.தே.ம.முன்­ன­ணி­யின் துணுக்­காய் இணைப்­பா­ளர் பால­சுப்­பி­ர­ம­ணி­யம், தமி­ழர் விடு­தலை கூட்­ட­ணி­யின் உறுப்­பி­னர் புண்­ணி­ய நா­தன், வவு­னிக்­கு­ளம் பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் பொது முகா­மை­யா­ளர் றொபின் உட்­ப­டப் பலர் கலந்து கொண்­ட­னர்.

“மாம­னி­தர் சிவ­நே­சன் தமிழ்­மக்­க­ளின் உரி­மைக்­கான போராட்­டத்­தில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் பேச்­சில் ஈடு­பட்டு இருந்த போது பேச்­சுக்­க­ளுக்கு அர­சி­யல் ரீதி­யில் வலுச்­சேர்க்­கின்ற செயற்­பா­டு­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்டு இருந்­தார். தமி­ழர்­க­ளின் உரிமைப் போராட்­டத்­தில் உறு­தி­யாக செயற்­பட்­டுக்­ கொண்டு இருந்­த­வர். மறு­பக்­கத்­தில் சமூக ஒடுக்கு முறை­க­ளுக்கு எதி­ரா­க­வும் மிக­வும் உக்­கி­ர­மா­கக் குரல் கொடுத்­த­வர். தன் சமூ­கம் சார்ந்து மிக நீண்­ட­கா­ல­மாக மக்­க­ளின் வாழ்­வி­ய­லில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்று மிகுந்த அக்­க­றை­யு­டன் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­வர். தமிழ்­மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளாக நாங்­கள் 22 பேர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போது நான்கு ஆண்­டு­கள் எங்­க­ளு­டன் அன்­பும் பண்­பும் உறு­தி­யும் மிக்க ஒரு­வ­ராக சேவை செய்­த­வர். அப்­ப­டிப்­பட்ட ஒரு­வரை எமது தேசம் இழந்­தது என்­பது அவ­ரு­டைய குடும்­பத்­துக்கு மட்­டு­மல்ல எங்­க­ளு­டைய ஒட்­டு­மொத்த விடு­த­லைக் காகப் போரா­டிய தமிழ் சமூ­கத்­துக்­கும் ஈடு­செய்­யப்­ப­ட­மு­டி­யாத பெரிய இழப்பு”- என்று நினைவு நிகழ்­வில் உரை­யைாற்­றிய தமிழ்­தே­சிய மக்­கள் முன்­ன­ணி­யின் செய­லா­ளர் செ. கஜேந் தி­ரன் தெரி­வித்­தார்.