Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மக்களோடு மறைந்திருக்கும் குற்றவாளிகள் கைதாகின்றனர்

குற்றப்பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் தெரிவிப்பு

சாவகச்சேரி பொலிஸ் நிலைய சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் பல குற்றச் செயல்கள் புரிந்து மக்களோடு மக்களாக மறைந்திருக்கும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பெரும் குற்றப்பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஆர்.பிரதீப் தெரிவித்தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
அண்­மைக் கால­மாக தென்­ம­ராட்­சிப் பிர­தேச சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தின் நிர்­வாக எல்­லைக்­குள் உள்ள கிரா­மங்­க­ளான நாவற்­குழி கோவி­லாக் கண்டி, தனங்­கி­ளப்பு, தக்­கன் தோப்பு உட்­பட மற்­றும் மீசாலை தில­கம்­பள்­ளம் குடி­யி­ருப்­புப்­ப­குதி, மட்­டு­வில் இந்­தி­ர­ாபு­ரம், மட்­டு­வில் வடக்கு, கைதடி, நவ­பு­ரம் ஆகிய பகு­தி­க­ளில் திடீர் நட­வ­டிக்­கை­களை பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.

இந்த நட­வ­டிக்­கை­க­ளில் யாழ்ப்­பாண மாவட்ட சாவ­கச்­சே­ரிப் பகு­திக்­கான உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் பணிப்­புக்­க­மைய, சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி விக்­கி­ர­ம சிங்க உத்­த­ர­வுக்­க­மைய சாவ­கச்­சேரி பொலிஸ் நிலைய பெரும் குற்­றப்­பி­ரி­வின் பொறுப்­ப­தி­காரி ஏ.வி விஜ­யக்­கோன் தலை­மை­யில் குற்­றத்­த­டுப்­புப் பிரி­வி­னர் குறித்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

இதன்­போது 2000 மில்­லி­கி­ராம் போதைப்­பொ­ருளை தனது உட­மை­யில் வைத்­தி­ருந்த மட்­டு­வில் சந்­தி­ர­பு­ரம் கிராம வாசி­யொ­ரு­வர் சுற்றி வளைப்­பில் கைது செய்­யப்­பட்­டார். இவர் பின்­னர் சாவ­கச்­சேரி நீதி மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டார்.

இதே குற்­றத்­த­டுப்­புப் பிரி­வின் நட­வ­டிக்­கை­யின் போது நாவற்­குழி பிர­தே­சத்­தில் இரண்டு பேர் கைது செய்­யப்­பட்டு தொடர்ச்­சி­யான பிரே­ர­ணை­யின் பின்­னர் பொலி­சா­ரால் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் வீதி­யால் நடந்து சென்ற பெண்­ணொ­ரு­வரை மோட்­டார் சைக்­கி­ளில் வந்த நபர்­கள் நிலத்­தில் தள்ளி வீழ்த்தி விட்டு அவர் அணிந்­தி­ருந்த தங்­கச் சங்­கி­லியை அறுத்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.

நபர் பாவித்த மோட்­டார் சைக்­கிள் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. நபர் தலை மறை­வாகி அந்­தப்­ப­கு­தி­யில் மறைந்­துள்­ளார். விசா­ர­ணை­கள் நடை­பெற்று வரு­கின்­றன. விரை­வில் அவர் கைது­செய்­யப்­ப­டு­வார்.

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் கரை­யோ­ரப்­ப­கு­தி­க­ளில் மணல் கூடிய அள­வில் அள்­ளப்­பட்டு வரு­கின்­றது. இதனை தடுப்­ப­தற்­கும் தீவி­ர­மான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. கடந்த வாரம் பிட்­டிப்­ப­கு­தி­யில் அனு­ம­தி­யில்­லா­மல் திருட்­டுத்­தன­மாக கள்ள மணல் ஏற்றி வந்த உழவு இயந்­தி­ர­மொன்று எமது அதி­ரடி நட­வ­டிக்­கை­க­ளில் பிடி­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­கள், குற்­றச்­செ­யல்­களைக் கட்­டுப்­ப­டுத்த பொது­மக்­கள் எமக்கு உத­வ­வேண்­டும்-­ என்­றார்.