Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இலங்கை அரசைக் கண்டித்து தமிழக மீனவா்கள் போராட்டம்

இலங்கை அரசின் புதிய சட்டத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனா்.

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் படகுகளுக்கு 17 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று இராமேஸ்வரம் மற்றும் தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. . கூட்டத்தின் முடிவில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 136 பேரை விடுதலை செய்ய வேண்டும், 175 படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்

எதிா்வரும் 16 ஆம் திகதி ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்பட 6 மாவட்ட மீனவர்கள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தையும் முற்றுகையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.