Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்புக்கு கொண்டு செல்­லப்­பட்ட 8 கிலோ கேர­ளாக் கஞ்­சா­வு­டன் சந்­தேக நபர் ஒரு­வர் வவு­னி­யா­வில் நேற்­றுக் காலை கைது செய்­யப்பட்­டார். என்று பொலி­ஸார்­­ தெரி­வித்த­னர்.

வன்­னிப் பிராந்­திய பிர­திப் பொலிஸ்மா அதி­பர் தேச­பந்து தென்­னக்­கோ­னின் வழி­ந­டத்­த­லில் வவு­னியா வலய பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் தென்­னக்­கோன், உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் பிய­சிறி பெர்­னாண்­டோ­வின் ஆலோ­ச­னை­யில் , வவு­னியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி மகிந்த வில்­லு­ வ­ராய்ச்­சி­யின் கண்­கா­ணிப்­பில், வவு­னியா ’பொலிஸ் நிலைய உத்­தி­யோ­கத்­தர் குழு­வி­ன­ரால் யாழ்ப்­பா­ணம் பகு­தி­யி­லி­ருந்து நேற்­றுக் காலை 10.20 மணி­ய­ள­வில் கொழும்­புக்குப் பொதி செய்­யப்­பட்டு கொண்டு செல்­லப்­பட்ட 8கிலோ கேரளக் கஞ்சா வவு­னியா நகர மத்­திய நிலை­யத்­தில் வைத்­துக் கைப்­பற்­றப்­பட்­டது.

கஞ்சா வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் கொழும்பை வசிப்­பி­ட­மாக் கொண்ட 54 வய­து­டைய ஒரு­வ­ர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.  அவர் மேல­திக விசா­ர­ணை­க­ளின் பின்­னர் வவு­னியா மாவட்ட நீதிவான் மன்­றில்  முற்­படுத்தப்­ப­ட­வுள்ளார் என்­று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­தனர்.