Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மருத்­து­வ­ம­னைக்கு சென்ற பெண்ணை காணவில்லை!!

மருத்­து­வ­ம­னைக்­குச் சென்ற வயோ­தி­பப் பெண் வீடு திரும்­ப­வில்லை என பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது என தரு­ம­புரம் பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் கண்­டா­வ­ளைப் பிர­தே­சத்
துக்கு உட்­பட்ட கிரா­மமே மயில்­வா­க­புர பிர­மந்­த­னாறு கிரா­மம் ஆகும். குறித்த கிரா­மத்தில் வசிக்­கும் வடி­வேல் பாக்­கி­யம் (வயது – 62) என்­ப­வர் கடந்த 8ஆம் திகதி கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னையில் மருந்து எடுப்­ப­தற்­காக சென்­றுள்­ளார்.

மருந்து எடுத்­துக்­கொண்டு வீடு திரும்­பாத நிலை­யில் அவரை தேடும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்ட போதும் அவர் கிடைக்­க­வில்லை என முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

குறித்த பெண் இரு­தய நோயாளி என­வும் அவரைக் கண்­ட­வர்­கள் தரு­ம­பு­ரம் பொலிஸ்நிலை­யத்­திலோ அல்­லது தம்­மு­டனோ தொடர்பு கொள்­ளு­மாறு குடும்­பத்­தி­னர் கேட்­டுக்­கொள்­கின்­ற­னர்.