Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இளை­ஞர் அணியால் சுவ­ரொட்­டி­கள் அகற்­றல்!!

தங்­க­ளால் ஒட்­டப்­பட்ட தேர்­தல் பரப்­புரைச் சுவ­ரொட்­டி­கள் மற்­றும் துண்­டுப்­பி­ர­சு­ரங்­கள் அனைத்­தை­யும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி இளை­ஞர் அணி­யி­னர் தாங்­க­ளா­கவே முன்­வந்து முற்­றா­கவே அகற்றி மதில் சுவர்­களை கழு­விச் சுத்­தம் செய்­த­னர்.

20க்கு மேற்­பட்ட இளை­ஞர்­கள் ஒன்­றி­ணைந்து குழு நிலை­யில் துப்பு­ரவுப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அச்­சு­வேலி தெற்கு இளை­ஞர்­க­ளின் இந்த முன்­மா­திரிச் செயற்­பாட்­டுக்கு பொது­மக்­கள் பாராட்­டுத் தெரி­வித்­த­னர்.

வலி.கிழக்கு பிர­தேச சபை­யின் நான்­காம் வட்­டா­ரத்­தில்(அச்­சு­வேலி தெற்கு)வீட்­டுச்­சின்­னத்­தில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற ம.கபி­லன் தலை­மை­யில் சுவ­ரொட்டி­களை அகற்றி துப்புர­வாக்­கும் பணி நேற்று முழு­நா­ளும் நடை­பெற்­றது.

வீட்­டுச் சின்­னத்­து­டன் கூடிய சுவ­ரொட்­டி­கள் அனைத்­தும் முழு­மை­யாக அகற்­றப்­பட்­ட­தோடு குறிப்­பிட்ட இடங்­கள் கழு­விச் சுத்­தம் செய்­யப்­பட்­டன. இந்த முன்­மா­திரி முயற்­சியை ஏனைய வேட்­பா­ளர்­க­ளும் செய்ய முன்­வர வெண்­டும் என பொது­மக்­கள் கோரு­கின்­ற­னர்.