Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கண்டெடுத்த நகையை ஒப்படைத்த பரிசாரகர்!!

சாவ­கச்­சேரி மருத்­து­வ­மனை வெளி­நோ­யா­ளர் பிரி­வில் அநா­த­ர­வா­கக் காணப்­பட்ட சுமார் 50 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான கைச்­சங்­கி­லியை கண்­டெ­டுத்த பெண் பரி­சா­ர­கர் உயர் அதி­கா­ரி­கள் மூலம் உரி­ய­வ­ரி­டம் சேர்ப்­பித்­தார்.இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது.

மருத்­து­வ­மனை வெளி­நோ­யா­ளர் பிரி­வில் சிகிச்சை பெற வந்த பெண்­ணொ­ரு­வர் அணிந்­தி­ருந்த கைச்­சங்­கிலி தவறி வீழ்ந்­ததை அவ­தா­னிக்­கா­மல் சென்­றுள்­ளார். மருத்­து­வ­ரி­டம் கையொப்­பம் பெறச் சென்ற பெண் பரி­சா­ர­கர் கத­வு­டன் கைச்­சங்­கிலி காணப்­பட்­ட­தை­ய­டுத்து அதனை எடுத்து மருத்­து­வ­ரி­டம் காண்­பித்­து­விட்டு மேற்­பார்­வை­யா­ளர் ஊடாக நிர்­வாக அலு­வ­ல­ரி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளார்.

சிறிது நேரத்­தின் பின்­னர் நகை­யைத் தேடி­வந்த பெண் உரிய ஆதா­ரங்­க­ளைச் சமர்ப்­பித்­த­தை­ய­டுத்து கைச்­சங்­கிலி அனை­வ­ரின் முன்­னி­லை­யில் கைய­ளிக்­கப்­பட்­டது. நகை­யைத் தவ­ற­விட்­ட­வர் கண்­டெ­டுத்த பெண் பரி­சா­ர­ருக்கு அன்­ப­ளிப்பு வழங்க முன்­வந்­த­போ­தி­லும் அவர் அதனை வாங்க மறுத்­து­விட்­டார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

பெண் பரி­சா­ர­க­ரின் நேர்­மை­யான குணத்தை மருத்­து­வ­மனை அலு­வ­லர்­கள் சக பணி­யா­ளர்­கள் மட்­டு­மன்றி வெளி­நோ­யா­ளர் பிரி­வில் சிகிச்சை பெற வந்த மக்­க­ளும் பாராட்­டி­னர். –