Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கொட்­ட­டி வாள்வெட்டில் இருவர் படுகாயம்!!

யாழ்ப்­பா­ணம் கொட்­ட­டி­யில் நடத்­தப்­பட்ட வாள்­வெட்­டில் 2 பேர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­னர். அவர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர்.

சம்­ப­வம் தொடர்­பில் வாள்­வெட்டு நடத்­தி­ய­வர்­க­ளு­டன் இணக்­கப்­பாட்­டுக்­குச் செல்­லு­மாறு பொலி­ஸார் கூறி­யதை ஏற்­ப­தற்கு தாம் மறுத்த நிலை­யில் வாள்­வெட்டு நடத்­தி­ய­வர்­களைப் பொலி­ஸார் இது­வரை கைது செய்­யா­ம­லுள்­ள­னர் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் குற்­றஞ்­சாட்டு­கின்
ற­னர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­கல் 5.30 மணி­ய­ள­வில் கொட்­டடி கண்­ணா­பு­ரம் பகு­தி­யில் வாள்­வெட்டு இடம்­பெற்­றுள்­ளது. சகோ­த­ர­னும் சகோ­த­ரி­யும் வீதி­யில் சென்­று­கொண்­டி­ருந்­த­ போது வீதி­யில் நின்­றி­ருந்த குழு­வி­ன­ரில் இரு­வர் சகோ­த­ரியை கிண்­ட­ல­டித்­துள்­ள­னர்.

அவ­ரது சகோ­த­ரன் அது தொடர்­பில் தட்­டிக்­ கேட்­ட­ போது வாய்த்­தர்க்­கம் ஏற்­பட்­டது. வீதி­யில் நின்­றி­ருந்த 5 பேர் கொண்ட குழு­வி­னர் வாள் எடுத்­து­வந்து வெட்­டி­யுள்­ள­னர். அதில் ஒரு­வர் காய­ம­டைந்­தார். நடந்த சம்­ப­வத்தை அவர் தனது சகோ­த­ர­னுக்­குக் கூறி­யுள்­ளார். அத­னைக் கேள்­விப்­பட்டு அந்த இடத்­துக்­குச் சென்ற மற்­றை­ய­வ­ரை­யும் வாள்­வெட்­டுக் குழு­வி­னர் வெட்­டி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­தி­ர­கு­மார் லோஜி­பன் என்­ப­வ­ருக்கு 26 இழை­ போ­டப்­பட்­டுள்­ளது. அவ­ரது சகோ­த­ர­னான சந்­தி­ர­கு­மார் ஜீவ­ரா­சா­வுக்கு 4 இழை போடப்­பட்­டுள்­ளது என்று அவர்­க­ளது உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர். அவர்­கள் இன்­னும் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர்.

சம்­ப­வம் நடை­பெற்ற பின் பொலி­ஸா­ருக்கு அறி­வித்த வேளை­யில் பொலி­ஸார் தேர்­தல் கட­மை­யில் ஈடு­பட்டு இருந்­த­மை­யால் 12ஆம் திகதி முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் வீட்­டுக்கு வந்து பார்­வை­யிட்­ட­னர்.

அதற்கு முதல்­நாள் மருத்­து­வ­ம­னை­யில் காயப்­பட்­ட­வர்­க­ளி­டம் சம்­ப­வம் தொடர்­பாக விசா­ரித்­த­னர். இரண்டு லட்­சம் ரூபா பணம் இழப்­பீ­டா­கப் பெற்­றுத் தரு­வ­தா­க­வும் அவர்­க­ளு­டன் இணக்­கப்­பாட்­டுக்­குச் செல்­லு­மா­றும் சிவில் உடை­யில் வந்­தி­ருந்த பொலி­ஸார் கேட்­ட­னர்.

ஆனால் நாம் அதற்கு மறுத்து நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யு­மாறு பொலி­ஸா­ரி­டம் கூறி­யி­ருந்­தோம். பொலி­ஸார் இது தொடர்­பாக எந்­த­வித சட்ட நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்று காயப்­பட்­ட­வ­ரின் தாய் தெரி­வித்­தார்.