Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சட்ட விரோதமாக கல் அகழ்ந்த இயந்திரங்கள் மீட்பு!!

சட்ட விரோ­த­மா­கக் கல் அகழ்ந்த பெக்கோ இயந்­தி­ரம் இரண்டை காங்­கே­சன்­துறை பொலி­ஸார் மீட்­டுள்ளனர். அவற்றை இயக்­கி­ய­வர்­கள் தப்­பி­யோ­டிய நிலை­யில் பின்­னர் நீதி­மன்­றில் சர­ண­டைந்­த­னர். அவர்­கள் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வம் கீரி­மலை கோவி­லுக்கு அரு­கா­மை­யில் தனி­யார் காணி ஒன்­றில் கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது. தேர்­தல் கட­மைக்­கா­கச் சென்­று­கொண்­டி­ருந்த காங்­கே­சன்­து­றைக்­குப் பொறுப்­பான உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் குறித்த இயந்­தி­ரங்­க­ளைக்­கண்டு தனது வாக­னத்தை நிறுத்தி நிலை­மையை ஆராய்ந்­துள்­ளார்.

அதன்­போது வாக­னத்­தை­விட்டு அவற்றை இயக்­கி­ய­வர்­கள் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர். இரண்டு பொலி­ஸாரை அந்த இடத்­தில் நிறுத்­திய உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் மேல­திக பொலி­ஸாரை அந்த இடத்­துக்கு அனுப்பி குறித்த இரண்டு வாக­னங்­க­ளை­யும் பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு செல்­லு­மாறு பணித்­தார்.

அதன்­படி இரண்டு வாக­னங்­க­ளும் பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­டன. மறு­நாள் இரண்டு பேர் பொலிஸ் நிலை­யத்­தில் சர­ண­டைந்­த­னர். தாமே கல் அகழ்­வில் ஈடு­பட்­ட­தாக அவர்­கள் கூறி­னர். அவர்­கள் பிணை­யில் விடு­விக்­கப்பட்ட­னர். மல்­லா­கம் நீதி­மன்றில் அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்­குத் தொட­ரப்­ப­டும் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

குறித்த காணி தனி­யா­ரு­டை­யது என்­றும் குறித்த வாக­னங்­கள் முன்­ன­ரும் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கல் அகழ்­வில் ஈடு­பட்­ட­தா­க­வும் மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.