Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஐ.தே.க. ஆட்­சி­ய­மைத்­தால் தமி­ழர்­க­ளுக்­குப் பாதிப்பே!!

ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்­குமா என்­பது தொடர்­பில் தற்­போது பெரும் எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது. அது தொடர்­பான நகர்­வு­க­ளும், வாதப் பிர­தி­வா­தங்­க­ளும் இடம்­பெற்று வரு­கின்­றன. கொழும்பு அர­சி­யல் நில­வ­ரம் உச்­சக்­கட்­டப் பர­ப­ரப்­பில் உள்­ளது. அங்­கி­ருந்து கிடைக்­கப்­பெ­றும் தக­வல்­கள் பல­வும் ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்­கும் என்­பது தொடர்­பா­கவே அமைந்­துள்­ளன.

அது சாத்­தி­ய­மா­னால், அதா­வது ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்­கு­மா­னால் நிச்­ச­யம் அது தமி­ழர்­க­ளுக்கு மிகப்­பெ­ரும் சிக்­க­லைக் கொடுக்­கும். தத்­த­மது கோரிக்­கை­களை நிறை­வேற்ற தமி­ழர்­கள் இரு­மு­னைப் போராட்­டத்­தில் தவிக்க வேண்­டிய நெருக்­க­டிக்­கும், கட்­டா­யத்­துக்­கும் தள்­ளப்­ப­டு­வர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­தி­ரக் கட்­சி­யும், தலைமை அமைச்­சர் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து கூட்டு ஆட்சி அமைத்­தி­ருந்­தன. எதிர்க்கட்­சி­யாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இருந்த போதி­லும், அது எந்த விட­யத்­தி­லே­னும் இமா­லய எதிர்ப்பை இந்­தக் கூட்டு ஆட்­சிக்கு வழங்­கி­யி­ருக்­க­வில்லை.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம், காணி விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தல், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, வடக்­கில் உள்ள இரா­ணு­வப் பிர­சன்­னத்­தைக் குறைத்­தல் உள்­ளிட்ட தனது பல்­வேறு கோரிக்­கை­களை கவ­னத்­திற்கொண்டு கூட்டு அர­சுக்­கான தனது ஆத­ரவை நிபந்­த­னை­யு­ட­னும், நிபந்­தனை இல்­லா­ம­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வழங்கி வந்­தது, வரு­கி­றது.

இந்த இரு­பெ­ரும் கட்­சி­க­ளின் இணைந்த ஆட்­சி­யில் தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மான தீர்­வு­கள் கிடைக்­கும், அல்­லது அதற்­கு­ரிய காத்­தி­ர­மான நகர்­வு­க­ளா­வது மேற்­கொள்­ளப்­ப­டும் என்ற எதிர்பார்ப்புகள் அத்­த­னை­யும் பொய்த்­துப் போயுள்­ளன. மகிந்த தரப்­பின் எதிர்ப்பை மீறி இந்­தக் கட்­சி­க­ளால் பெரி­ய­ அள­வில் எதை­யும் சாதிக்க இய­லாது போய்­விட்­டது. புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தி­லும் இந்­தக் கட்­சி­கள் படு­தோல்­வி­யையே சந்­தித்­துள்­ளன. இவ்­வா­றி­ருக்க ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைத்­தால் அது தமி­ழர்­க­ளுக்கு மேலும் பாத­கம் என்­பது மலை­யில் ஏற்­றி­வைத்த தீபத்­துக்கு ஒப்­பான நிலை­தான்.

கூட்டு அரசு முன்­வைத்த திட்­டங்­க­ளுக்­கும், எடுத்­துக்­கொண்ட தீர்­மா­னங்களுக்கும் மகிந்த தரப்­பில் இருந்து மட்­டுமே இது­வரை பெரி­ய­ள­வில் எதிர்ப்பு இருந்­தது. அந்த ஒரு­முனை எதிர்ப்பை மீறியே கூட்டு அர­சால் எதை­யும் சாதித்­து­விட முடி­ய­வில்லை. ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைத்­தால் தமி­ழர்­கள் விட­யத்­தில் அது எடுக்­கும் நகர்­வு­க­ளுக்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, சிறி­லங்கா பொது­ஜன முன்­னணி என்று இரு தரப்­புக்­க­ளில் இருந்­தும் எதிர்ப்பு வெளிப்­ப­டும். இரண்டு கட்­சி­கள் சேர்ந்து ஒரு­முனை எதிர்ப்­பைச் சமா­ளித்து எதை­யும் செய்­ய­மு­டி­யாதபோது, ஒரு கட்சி தனித்து ஆட்­சி­ய­மைத்து இரு­முனை எதிர்ப்­பைச் சமா­ளித்து எதை எப்­ப­டிச் சாதித்­து­வி­டப் போகி­றது.

இன­வா­தமே தெற்­கின் அர­சி­யல் என்­பது உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் மகிந்த பெற்­றுக்­கொண்ட இமா­லய வெற்­றி­யில் இருந்து மற்­று­மொரு தடவை நிரூபணமாகியுள்­ளது. இவ்­வா­றி­ருக்க அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு இன்­னும் இரண்டு வரு­டங்­கள் மீத­மி­ருக்­கை­யில், ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைத்­தா­லும், தனது வாக்கு வங்­கி­யைக் கருத்­திற்கொண்டு அது தமி­ழர்­க­ளின் கோரிக்­கை­கள் எதற்கும் செவி­சாய்க்­காது என்­றும் எண்­ணத்­தோன்­று­ கி­றது. அதுவே யதார்த்­த­மா­ன­தும் கூட.

இன்­னும் சொல்­லப்­போ­னால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்­பது போன்ற அறி­விப்­புக்­க­ளும்­கூட, தமி­ழர் தாய­கத்­துக்கு வந்­து­சே­ர­லாம். 2016ஆம் ஆண்டில் தான் ஆற்­றிய உரை­யொன்­றில் ‘காணா­மல் போன­வர்­கள் எவ­ரும் உயி­ரு­டன் இல்லை’ என்று தலைமை அமைச்­சர் சொன்­ன­து­ போல.