Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் மகிந்­த­வுக்கு பின்­ன­டைவே!!

நிதி அமைச்­சர் மங்­கள ஆதா­ரத்­து­டன் தெரி­விப்பு

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச வெற்­றி­ய­டைந்த போதி­லும், அவ­ரது வாக்கு வங்­கி­யில் பெரும் சரிவு ஏற்­பட்­டுள்­ள­தாக நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தார்.

2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச 5.77 மில்­லி­யன் வாக்­கு­க­ளைப் பெற்­றுக் கொண்­டார். இது அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளின் 47.6 சத­வீ­த­மா­கும். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் அவ­ரால், 4.95 மில்­லி­யன் வாக்­கு­க­ளையே பெற்­றுக் கொள்ள முடிந்­துள்­ளது.

இது அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளின் 44.7 சத­வீ­த­மா­கும். இது அவ­ரது வாக்கு வங்­கி­யில் ஏற்­பட்­டுள்ள பெரும் சரி­வையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

6.1 மில்­லி­யன் அதா­வது 55.3 சத­வீத மக்­கள் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­க­வே­தான் வாக்­க­ளித்­துள்­ள­னர்.

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திக­தி­யன்று 51 சத­வீ­த­மான மக்­கள் எங்­க­ளால் ஒன்­றி­ணைக்­கப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைத் தலை­வ­ரா­கத் தெரி­வு­செய்து, நாட்­டில் நடை­மு­றை­யில் இருந்த சர்­வா­தி­கார ஆட்­சிக்கு முடி­வு­கட்­டி­னர்.

மீண்­டும் குடும்ப ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளுக்கு நெருங்­கி­ய­வர்­க­ளும் ஆட்­சிக்­கு­வர, நல்­லாட்சி அர­சைக் கட்­டி­யெ­ழுப்­பிய மக்­க­ளா­கிய நீங்­கள் இட­ம­ளிக்­கக் கூடாது – –என்­றார்.