Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அரசு தொட­ரும் விரும்­பி­ய­வர்­கள் இணை­ய­லாம்!!

இந்த அரசு எதிர்­வ­ரும் இரண்­டரை ஆண்­டு­கள் காலத்­துக்கு தொடர்ந்து இருக்­கும் என்று ஐக்­கிய தேசிய கட்­சி­யின் தவி­சா­ளர் மலிக் சம­ர­விக்­ரம கூறி­யுள்­ளார்.  அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாடா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு இன்­னும் இரண்­டரை ஆண்­டு­கா­லம் இருப்­ப­த­னால் அர­சில் மாற்­றம் ஒன்று தேவை­யில்லை.அர­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க விரும்­பும் எந்­த­வொரு கட்­சி­யு­ட­னும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி தயா­ராக இருக்­கின்­றது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உள்­ளிட்ட ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளும் அர­சு­டன் இணைந்து செயற்­பட முடி­யும். நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யின் வாக்கு வீதத்­தில் எவ்­வித குறை­வும் இல்லை -– என்­றார்.