Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மகிந்­த­வின் கனவு பலிக்­காது- ராஜித

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் வெற்­றி­பெற்று நாட்­டின் தலைமை அமைச்­ச­ரா­கவோ அல்­லது பொதுத்­தேர்­தலை நடத்­து­வ­தற்கோ முன்­னாள் அரச தலை­வர் மகிந்த கனவு கண்­டு­கொண்­டி­ருந்­த­போ­தும் அது இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. இவ்­வாறு அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தேர்­தல் பெறு­பே­று­கள் தொடர்­பாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்கிர­ம­சிங்க ஆகி­யோ­ரு­டன் கலந்­து­ரை­யா­டி­னேன். அர­சின் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­து­கொண்டு முன் செல்ல இரண்­டு­பே­ரும் இணக்­கம் தெரி­வித்­த­னர்.

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­த­லில் வெற்­றி­பெற்று நாட்­டின் தலைமை அமைச்­ச­ரா­கவோ அல்­லது பொதுத்­தேர்­தல் ஒன்றை நடத்­து­வ­தற்கோ முன்­னாள் அரச தலை­வர் மகிந்த கனவு கண்­டு­கொண்­டி­ருந்­த­போ­தும் அது இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. முன்­னாள் அரச தலை­வ­ருக்கு தலைமை அமைச்­சர் பதவி வழங்க சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியோ ஐக்­கிய தேசியக் கட்­சியோ இது­வரை முன்­மொ­ழி­ய­வில்லை.

மேலும், இந்­தத் தேர்­த­லில் பேரு­வளை தொகுதி தோல்­வி­ய­டைந்­த­து­டன் என்­னைக் கண்டு பிடிக்க முடி­யா­மல் இருப்­ப­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டலஸ் அழ­கப்­பெ­ரும ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்­ளார். டலஸ் அழ­கப்­பெ­ரு­ம­வைப்­போன்று நான் அமெ­ரிக்­கா­வுக்கு தப்­பிச்­செல்­ல­வில்லை. வீட்­டில்­தான் இருக்­கின்­றேன் என்­பதை அவ­ருக்குத் தெரி­விக்க விரும்­பு­கின்­றேன் –- என்­றார்.