Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மாமா, மரு­ம­கன் சம வாக்­கு­கள் குலுக்­க­லில் வென்­றார் மரு­ம­கன்!!

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் ஒரே தொகு­தி­யில் போட்­டி­யிட்ட மாமா, மரு­ம­கன் இரு­வ­ரும் ஒரே எண்­ணிக்­கை­யி­லான வாக்­கு­க­ளைப் பெற்றிருந்தனர். மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் முன்­னி­லை­யில் குலுக்­கல் இடம்­பெற்­றது. அதில் மரு­ம­கன் வெற்றி பெற்று பிர­தேச சபை உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்டார்.

இந்­தச் சம்­ப­வம், அநு­ரா­த­பு­ரம் மாவட்­டத்­தின், பல­கல பிர­தேச சபை­யின், தம்­புள்ள கல்­மி­லே­வேவா வட்­டா­ரத்­தி­ல் இடம்­பெற்­றுள்­ளது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் சுரங்க ரத்­னா­யக்­க­வும், சிறி­லங்கா பொது­ஜன பெர­முன சார்­பில் அவ­ரது மாம­னா­ரான அனுர பிர­தாப் ரத்­நா­யக்­க­வும் போட்­டி­யிட்டிருந்தனர். இரு­வ­ருக்­கும் வட்­டா­ரத்­தில் ஒரே எண்­ணிக்­கை­யி­லான வாக்­கு­களே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

வட்­டா­ரத்­தில் யார் வெற்­றி­பெற்­ற­வர் என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக குலுக்­கல் இடம்­பெற்­றது. அதில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில் போட்­டி­யிட்ட சுரங்க தெரிவு செய்­யப்­பட்­டார். அவர் வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.