Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

முன்­னாள் போராளி ஆஸி.யால் திருப்பி அனுப்­பப்­ப­டு­கி­றார்!!

ஐ.நாவின் கோரிக்­கை­க­ளை­யும் நிரா­க­ரித்து, விடு­த­லைப் புலி­கள் இயக்க முன்­னாள் போராளி ஒரு­வரை ஆஸ்­தி­ரே­லிய அரசு இலங்­கைக்­குத் திருப்பி அனுப்­ப­வுள்­ளது.

2012ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்­தி­ரே­லியா சென்­றி­ருந்த சாந்­த­ரூ­பன் என்­ப­வரே, எதிர்­வ­ரும் 22ஆம் திகதி இலங்­கைக்­குத் திருப்பி அனுப்­பப்­ப­ட­வுள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லிய அரசு இவ­ரது புக­லி­டக் கோரிக்­கையை நிரா­க­ரித்­தி­ருந்­தது. எனி­னும், விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தில், கடற்­பு­லி­க­ளின் பட­கு­கள் கட்­டு­மா­னப் பிரி­வில் முக்­கிய உறுப்­பி­ன­ராக இருந்த சாந்­த­ரூ­பன் இலங்­கைக்­குத் திருப்பி அனுப்­பப்­பட்­டால், உயி­ரா­பத்தை எதிர்­கொள்­ள­லாம் என்று அக­தி­க­ளுக்­கான ஐ.நா முக­வ­ர­கம் எச்­ச­ரித்­தி­ருந்­தது.

அவரை இலங்­கைக்­குத் திருப்பி அனுப்ப வேண்­டாம் என்று ஐ.நா. விடுத்­தி­ ருந்த கோரிக்­கையை நிரா­க­ரித்து, எதிர்­வ­ரும் 22ஆம் திகதி கொழும்­புக்கு அனுப்பி வைக்க ஆஸ்­தி­ரே­லியா நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

கடும் பாது­காப்­பு­டன் அவர் கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளார். இது தொடர்­பான அறி­வித்­தல் சாந்­த­ரூ­ப­னுக்கு ஆஸ்­தி­ரே­லிய எல்லைப் பாது­காப்­புப் பிரி­வி­ன­ரால் வழங்­கப்­பட்­டுள்­ளது. சாந்­த­ரூ­பன் தற்­போது ஆஸ்­தி­ரே­லியத் தடுப்பு முகா­மில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளார்.