Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வண்­டு­க­ளும் தேனீக்­க­ளும் மொட்­டினை மொய்க்­கு­மாம்!

தமிழ் வண்­டு­க­ளும் முஸ்லிம் தேனீக்­க­ளும் மொய்க்க மொட்டு மல­ரும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், பிவித்­துரு ஹெல உறு­மய கட்­சி­யின் தலை­வ­ரு­மான, உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்­ளார்.

இதே­வேளை, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் பொது­மக்­கள் முன்­ன­ணிக் கட்சி அடைந்த வெற்­றி­யு­டன் கொழும்பு அர­சி­யல் தன் வலுச் சம­ நி­லையை இழந்­துள்­ளது.

19ஆவது திருத்­தச் சட்­டத்­தின் கீழ் நாலரை ஆண்­டு­க­ளுக்கு நாடா­ளு­மன்றை அரச தலை­வர் கலைக்க முடி­யாத நிலை­யில், 59 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட கூட்டு எதி­ர­ணி­யி­னர் பல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தம்­பக்­கம் இழுப்­ப­தற்­கான பேரம்­பே­சல்­கள் ஆரம்­பிக்­கப்­பட்டு உள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறிப்­பாகக் கூட்டு அர­சில் இணைந்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பலர் முதற்­கட்­ட­மாக எதி­ர­ணிக்­குச் செல்­ல­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
ஆறு­மு­கம் தொண்­ட­மா­னின் தலை­மை­யி­லான இலங்­கைத் தொழி­லா­ளர் காங்­கி­ரஸ் பொது­ஜன பெர­மு­ன­வு­டன் இணைந்­துள்­ளது. பிர­தான முஸ்­லிம் கட்­சி­யின் அமைச்­சர் ஒரு­வர் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வு­டன் பேசு­வ­தற்கு நேரம் ஒதுக்கித் தரு­மாறு கேட்­டுள்­ள­தாகத் தனது முக­நூ­லில் பதி­விட்­டுள்­ளார்.

ஐக்­கிய தேசி­யக் கட்சி தலை­மை­யி­லான அரசு தனது பெரும்­பான்­மையை இழக்­கும் நிலை ஏற்­ப­டும் போது பெரும்­பான்­மையை நிரூபிக்­கும் மகிந்த அணி­யில் இருந்து ஒரு­வர் தலைமை அமைச்­ச­ராக முடி­யும்.