Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தேர்­த­லின் எதி­ரொலி தள்­ளா­டும் பொரு­ளா­தா­ரம்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை அடுத்து ஏற்­பட்­டுள்ள அர­சி­யல் குழப்ப நிலை­க­ளால், நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தில் உறு­தி­யற்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது.உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில், கூட்டு அர­சில் இடம்­பெற்­றுள்ள இரண்டு பிர­தான கட்­சி­க­ளும் தோல்­வி­யைச் சந்­தித்­துள்­ளன.

இதை­ய­டுத்து, கூட்டு அர­சுக்­குள் அர­சி­யல் குழப்­பங்­கள் ஏற்­பட்டு உறு­தி­யற்ற நிலை தோன்­றி­யுள்­ளது.இத­னால் பங்­குச்­சந்­தை­யில் நேற்­று­முன் தின­மும், நேற்­றும் வீழ்ச்சி ஏற்­பட்­டது. முக்­கி­ய­மான பங்­கு­க­ளின் விலை­க­ளில் கணி­ச­மான சரிவு ஏற்­பட்­டுள்­ளது.

அர­சி­யல் குழப்­ப­நி­லை­யால் முத­லீட்­டா­ளர்­கள் பங்­கு­களை வாங்­கத் தயக்­கம் காட்­டு­வ­தா­க­வும் இத­னால், பங்­குச் சந்­தை­யில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும், பொரு­ளா­தார நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.அத்­து­டன், அமெ­ரிக்க டொல­ருக்கு எதி­ராக ரூபா­வின் மதிப்­பும் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.