Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மக்­க­ளி­டம் பாடம் கற்­றுள்­ளோம்!

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் நாம் சிறந்­த­தொரு படிப்­பி­னை­யை மக்­க­ளி­டம் இருந்து கற்­றுக் கொண்­டுள்­ளோம். மக்­க­ளின் இந்த மாற்­றத்தைக் கருத்­திற் கொண்டு மீண்­டும் ஜன­நா­யகப் பாதை­யைப் பலப்­ப­டுத்தி உறு­தி­யாக மீண்­டெ­ழு­வோம் என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்­துள்­ளார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆட்சி மாற்­றம் ஒன்றை ஏற்­ப­டுத்தி அந்த மாற்­றத்­தில் மக்­கள் திருப்­தி­ய­டைந்த போதி­லும் கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்ற சில மோச­மான அர­சி­யல் நகர்­வு­கள் மற்­றும் கடந்த காலக் குற்­றங்­களை மறைக்­கும் செயற்­பா­டு­கள் என்­பன மக்­க­ளின் நம்­பிக்­கையைத் தகர்க்­கும் வகை­யில் அமைந்­து­விட்­டன. அதற்­கான மக்­க­ளின் பிர­தி­ ப­லிப்பே இந்த உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் மாற்­ற­மா­கும்.

மக்­க­ளின் இந்த மாற்­றத்­தைக் கருத்­திற்கொண்டு மீண்­டும் அர­சாக நாம் ஜன­நா­ய­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பும் பாதை­யில் பல­மாக முன்­னோக்கி நகர்­வோம். அதற்­கான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாகக் கையாள்­வோம். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் மக்­க­ளின் நிலை­ப்பாட்டைக் கொண்டு அர­சைக் கலைக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. பொதுத் தேர்­தல் ஒன்­றுக்குச் செல்ல வேண்­டிய தேவை­யும் இல்லை. நல்­லாட்சி அரசு 2020 ஆம் ஆண்டு வரை­யில் இடம்­பெ­றும் -– என்­றார்.