Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சம்­பந்­தனை ஓரங்­கட்­ட ­வேண்­டும் – குண­தாச அம­ர­சே­கர!!

தமிழ் மக்­கள் தமக்­கான விடு­தலை மற்­றும் உரி­மை­க­ளு­டன் வாழ வேண்­டு­மா­யின் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் போன்­ற­வர்­கள் அர­சி­ய­லில் இருந்து ஓரங்கட்டப்பட­வேண்­டும் என்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்­தின் தலை­வர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்­தார்.  அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நல்­லாட்சி என்ற பெய­ரில் நாட்டைப் பிள­வு­ப­டுத்­தவே முற்­பட்­ட­னர். இதற்கு நாட்டு மக்­கள் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­னர். நாடு பிரிக்­கப்­பட்­டால் ஒரு தரப்­பி­னர் மாத்­தி­ரம் நன்மை அடை­வர். நாட்டைப் பிரிப்­ப­தால் தமிழ் அர­சி­யல் வாதி­க­ளின் ஒரு சிலரே நன்மை அடை­வர்.
எதிர்க் கட்­சித் தலை­வர் புலம்­பெ­யர்­வாழ் தமி­ழர்­களை மாத்­தி­ரம் பிர­தி­நி­தித்­து­வப் ப­டுத்­து­வ­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. மலை­நாட்டுப் பிர­தே­சங்­க­ளின் நலனைப் பற்றி ஒரு­பொ­ழு­தும் நினைக்­க­வில்லை. ஆனால் அவர்­களே தமிழ் மக்­க­ளின் ஒரு­மைப்­பாடு பற்றிப் பேசு­கின்­ற­னர்.

வட­கி­ழக்­கில் வாழும் தமிழ் மக்­கள் தற்­போது உண்மை நிலை­யை அறிந்­துள்­ள­னர். அவர்­க­ளின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­க­ளுக்கு நல்­லாட்சி அரசு பொய்­யான வாக்­கு­று­தி­களை முன்­வைத்­த­ மை ­யால் தற்­போது விரக்­தியுற்­றுள்­ளனர்.

நாட்­டில் கடந்த காலத்­தில் இடம் பெற்ற கசப்­பான அனு­ப­வங்­களை மக்­கள் மத்­தி­யில் மீண்­டும் உரு­வாக்கி தமது தேவை­களை நிறை­வேற்­றிக் கொள்­வ­தற்­காகத் தமிழ் மற்­றும் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் இன­வா­தத்தை உரு­வாக்க முயல்­வதைத் தமிழ் மக்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.
தமிழ் மக்­கள் தமக்­கான விடு­தலை மற்­றும் உரி­மை­க­ளு­டன் இலங்­கை­யர் என்ற அடை­யா­ளத்­து­டன் ஒரு­மித்து வாழ­வேண்­டு­மா­யின் சம்­பந்­தன் மற்­றும் சுமந்­தி­ரன் போன்ற அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக ஒரு சிறந்த தலை­வரை உரு­வாக்­கிக் கொள்ள வேண்­டும் -– என்­றார்.