Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சக்கோட்டை கடற்கரையில் சுற்றுலா காட்சிக் கூடம் திறப்பு!!

பருத்­தித்­துறை சக்­கோட்டை கடற்­க­ரை­யில் சுற்­றுலா காட்­சிக்­கூ­டம் ஒன்று அமைக்­கப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள பருத்­தித்­துறை சக்­கோட்டை கடற்­க­ரை­யில் உள்ள சிங்­கக் கொடிக்கு அரு­கா­மை­யில் இருந்து சூரிய உத­யத்­தை­யும் சூரி­யன் மறை­வ­தை­யும் சிறந்த முறை­யில் பார்க்­க­லாம்.

சுற்­று­லாப் பய­ணி­க­ளின் பயன்­க­ருதி யாழ்ப்­பா­ணக் கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்ச­ன ஹெட்­டி­யா­ரச்­சி­யின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க 55ஆவது படை­பி­ரி­வின் கட்­ட­ளைத் தள­ப­தி­யின் மேற்­பார்­வை­யில் 551ஆவது படைப் பிரி­வின் முழு உத­வி­யு­டன் அந்த இடத்­தில் சுற்­றுலா காட்­சிக்­கூ­டம் ஒன்று அமைக்­கப்­பட்­டது.

அது யாழ்ப்­பா­ணக் கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்ச­ன ஹெட்­டி­யா­ராச்­சி­யால் கடந்த திங்­கட்­கி­ழமை திறந்து வைக்­கப்­பட்­டது. இந்த நிகழ்­வில் யாழ்ப்­பா­ணக் கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்சன ஹெட்­டி­யா­ரச்சி உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­ன­ர்.