Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கடற்படையினரின் பிடியில் இருக்கும்  காணியை மீட்டுத் தரக் கோரிக்கை!!

கடற்­ப­டை­யி­ன­ரின் பிடி­யில் உள்ள தனது சொந்­தக் காணியை மீட்­டுத் தரு­மாறு அல்­லது அதற்கு ஒப்­பான நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு காணி தொடர்­பான பிரச்­சி­னையை தீர்த்­துத் தரு­மாறு நபர் ஒரு­வர் அலைந்து திரி­கி­றார் என்று  தெரி­விக்­கப்­பட்­டது. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

மாத­கல் கடற்­கரை வீதியைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ரின் காணி­யில் பகு­தி­யாக கடற்­ப­டை­யி­னர் தமது சோதனைச் சாவ­டியை  அமைத்­துள்­ள­னர். இத­னால் தனது காணியை முழு­மை­யா­கப்  பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­யில் மனைவி மற்­றும் மக­னு­டன் மிக  இக்­கட்­டான நிலை­யில் வாழ்ந்து வரு­கின்­றார்.

குறித்த நபர் திரு­ம­ணம் ஆகிய பின்­னர் பெண்­ணின் வீட்­டார் சார்­பில்  1986ஆம் ஆண்டு தம்­ப­தி­கள் பெய­ரில் இரண்டு பரப்­புக் காணி  வழங்­கப்­பட்­டது. போரின் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து மீண்­டும் 2003ஆம் ஆண்டு அந்­தக் காணி­யில் அவர்­கள் குடி­யே­றி­யுள்ளனர். பின்­னர்  இந்­திய வீட்­டுத் திட்ட உத­வி­யு­டன் தமது காணி­யில் வீடு அமைத்து  வாழந்து வரு­கின்­ற­னர். எனி­னும் அந்­தக் காணி­யில் கடற்­ப­டை­யும் தமது  சோத­னைச் சாவ­டியை அமைத்து உள்­ளது.

இத­னால் அங்கு வேலி அமைக்க முடி­யா­ம­லும், அன்­றாட நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள  முடி­யா­ம­லும் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இது தொடர்­பில் பல அதி­கா­ரி­களைச்  சந்­தித்­த­போ­தும் பயன் இல்லை. காணியை கடற்­ப­டை­யி­ன­ரி­டம் இருந்து  முழு­மை­யா­கப் பெற்று தர வேண்­டும் அல்­லது காணிக்கு ஒப்­பான  பணத்­தை ஒரே தட­வை­யில் பெற்­றுத் தர வேண்­டும் என்று சம்­பந்­த­ப்பட்ட அதி­கா­ரி­களை குடும்­பத்­தி­னர் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.