Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சாரதிகளின் கடமை நேரம் தொடர்பில் ஆராய நடவடிக்கை

வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் சேவை­யாற்­றும் சார­தி­க­ளின் கடமை நேரம் தொடர்­பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது என மாகாண சுகா­தார அமைச்­சுத் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சின் கீழ் பல்­வேறு திணைக்­க­ளங்­கள் மற்­றும் அமைச்­சில் சார­தி­கள் கட­மை­யாற்­று­கின்­ற­னர்.

இவர்­க­ளின் கடமை நேரம் தொடர்­பில் அவர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. நீண்ட தூரம் அல்­லது வெளி­மா­வட்­டங்­க­ளுக்கு சேவை­யில் ஈடு­ப­டும்­போது அவர்­க­ளுக்­கான ஒய்வு அவ­சி­ய­மா­கும். அவர்­க­ளின் கடமை நேரத்­தின்­படி தூர சேவை­யில் ஈடு­ப­டும்­போது உட­ன­டி­யாக ஒரு இடத்­தில் இருந்து இன்­னோர் இடத்­துக்கு மீளத் திரும்ப வேண்­டிய தேவை உள்­ளது.

நீண்ட தூரம் பய­ணம் செய்த பின்­னர் சார­தி­கள் உட­ன­டி­யாக திரும்­பும் போது ஓய்­வின்மை கார­ண­மாக விபத்­துக்கு உள்­ளா­கும் சந்­தர்­ப்பங்­கள் ஏற்­ப­ட­லாம். ஆகவே அவர்­க­ளின் கடமை நேரம் தொடர்­பில் தொடர்ச்­சி­யாக துறை சார்ந்த கூட்டங்­க­ளில் தெரி­விக்­கப்­பட்டு வந்­தது. ஆகவே இந்த விட­யம் தொடர்­பில் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் கலந்­து­ரை­யாடி முடிவு எட்­டப்­ப­ட­வுள்­ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.