Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பச்சை மிளகாய் செய்கை குடாநாட்டில் அமோக வெற்றி

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் விவ­சா­யி­க­ளால் பயி­ரி­டப்­பட்ட பச்சை மிள­காய் செய்கை அமோக விளைச்­சபை பெற்­றுக் கொடுத்­துள்­ளது. அநே­க­மான இடங்­க­ளில் பச்சை மிள­காய் பயி­ரி­டப்­பட்­டுள்­ளது. தற்­போது மிள­காய் அறு­வடை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது ­என விவ­சா­யத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது.

கடந்த சில மாதங்­க­ளாக பச்சை மிள­காய்க்கு பற்­றாக்­கு­றை­யும் தட்­டுப்­பா­டும் ஏற்­பட்­டி­ருந்­தது. கால­நிலை மற்­றும் மழை­யின் தாக்­கத்­தால் இச்­செய்கை பாதிக்­கப்­பட்­டது.  தற்­போ­தைய நிலை­யில் கூடு­த­லான செய்­கை­யா­ளர்­கள் இச்­செய்­கை­யில் ஆர்­வம் காட்டி ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

குடா­நாட்­டில் பர­வ­லாக விவ­சா­யி­கள் இந்­தச் செய்­கை­யில் அவர்­கள் ஈடு­பட்­ட­னர். அனே­க­மான விவ­சா­யி­கள் எம்.ஜ கிறின் இன மிள­காய் செய்­கை­யி­லும் ஈடு­பட்­ட­னர். இச்­செய்கை தற்­போது பெரும் வெற்­றி­யைக் கொடுத்­துள்­ளது.