Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மின் ஒழுக்கால் அழிந்த வீடு சீரமைப்பு!!

யாழ்ப்­பா­ணம் வட­லி­ய­டைப்பு பகு­தி­யில் கடந்த வரு­டம் மார்ச் மாதம் 7ஆம் திகதி அன்று ஏற்­பட்ட மின் ஒழுக்­கால் முற்­றாக எரிந்து அழிந்த வீடு வடக்கு மாகாண பேர­வைத் தலை­வர் உள்­ளிட்­டோ­ரின் உத­வி­யால் மீள­வும் சீரமைக்கப்பட்டது.

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள எரி­பொ­ருள் விற்­பனை நிலை­யத்­தில் பணி­யாற்­றும் குறித்த ஊழி­ய­ரின் இல்­லம் கடந்த ஆண்டு வீட்­டில் யாரும் இல்­லாத சம­யம் ஏற்­பட்ட மின் ஒழுக்கு கார­ண­மாக முற்­றாக எரிந்து அழிந்­தது. அத­னால் சுமார் 55 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யான சொத்து இழப்­பைச் சந்­தித்து 3 பிள்­ளை­க­ளு­டன் நிர்க்­கதி நிலை­யில் இருந்த வேளை­யில் பேர­வைத் தலை­வ­ரின் ஒதுக்­கீட்­டில் இருந்து 8 லட்­சம் ரூபா வழங்­கப்­பட்­டது.

இவ்­வாறு வழங்­கப்­பட்ட நிதி­யு­டன் சுய முயற்­சி­யால் அதே இடத்­தில் மீண்­டும் புதி­தாக ஓர் இல்­லம் அமைக்­கப்­பட்டு நேற்று­முந்­தினம் தினம் புது­மனை புகு­விழா இடம்­பெற்­றது. இதன்­போது குறித்த இல்­லத்­துக்கு நேரில் சென்ற பேர­வைத் தலை­வர் வீட்­டைப் பார்­வை­யிட்­டார்.