Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பாரம்பரிய உணவுற்பத்தி, விற்பனை நிலையத்தின் செயற்பாடு விரைவில் !!

மன்­னார் மடுப் பிர­தே­சத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள பாரம்­ப­ரிய உணவு உற்­பத்தி மற்­றும் விற்­பனை நிலை­யத்­தின் செயற்­பா­டு­கள் விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன என மாகாண மக­ளிர் விவ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மடுப் பிர­தே­சத்­தில் பாரம்­ப­ரிய உணவு உற்­பத்தி விற்­பனை நிலை­யம் அமைச்­சின் 6 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கீட்­டில் கிராம அபி­வி­ருத்­தித் திணைக்­க­ளத்­தின் மேற்­பார்­வை­யின் கீழ் 5.52 மில்­லி­யன் ரூபா செல­வில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. பாரம்­ப­ரிய உணவு முறை­க­ளைப் பேணிப் பாது­காப்­ப­தற்­கா­வும், பெண்­க­ளுக்­கான சுய தொழில் வாய்ப்பை வழங்­கும் நோக்­கில் இந்த நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தேச மாதர் கிராம அபி­வி­ருத்தி சங்க பெண்­க­ளால் இந்த நிலை­யத்­தில் பாரம்­ப­ரிய உண­வு­கள் தயா­ரிக்­கப்­பட்டு விற்­பனை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. விற்­பனைச் செயற்­பாட்­டுக்­காக ஒரு குழு­வில் 10 பெண்­கள் வீதம் இரு குழுவினர் இரண்டு வேளை­க­ளில் மாறி மாறி கடமை புரி­வார்­கள். பாரம்­ப­ரிய உண­வு­கள் சுகா­தார முறைப்­படி உற்­பத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளன.

பாரம்­ப­ரிய உண­வினை மறந்து துரித உண­வு­களை உண்டு நோய்க்­க­ளுக்கு உள்­ளா­கும் மக்­க­ளுக்கு இந்த நிலை­யம் ஒரு வரப்­பி­ர­தா­ச­மாக அமை­யும். நிலை­ய­மா­னது மடு பிர­தேச கிராம அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ரின் நேர­டிக் கண்­கா­ணிப்­பில் செயற்­ப­ட­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.