Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ரொஹிங்­யர் பிரச்­சி­னையை புரிந்­து­கொள்­ள­வில்லை சூகி!!

பிரிட்­டன் அய­லு­ற­வுத்­துறை செய­லர் கவலை

மியன்­மார் அர­சின் தலைமை ஆலோ­ச­க­ரான ஆங் சாங் சூகி, ரொஹிங்­யர்­க­ளின் விவ­கா­ரம் குறித்து அதி­கம் அறிந்­தி­ருக்­க­வில்லை என்று தெரி­வித்­தார் பிரிட்­டன் அய­லு­ற­வுத்­துறை செய­லர் போரிஸ் ஜோன்­சன்.

ஜோன்­சன் – சூகி இடை­யி­லான சந்­திப்பு நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பின் பின்­னர் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே ஜோன்­சன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘ரொஹிங்­கிய மக்­கள் நிலமை மிக­வும் மோச­மாக உள்­ளது. உண்­மை­யில் சூகி ரொஹிங்­கிய மக்­க­ளின் பிரச்சினைகள் குறித்து முழு­வ­தும் புரிந்து கொண்­டாரா? என்று தெரி­ய­வில்லை. அவர் சென்று நாங்­கள் பார்த்­த­தைப் பார்க்க வேண்­டும். அவ­ரு­டைய தலை­மை­யில் நம்­பிக்கை உள்­ளது. ஆனால் இங்கு நடக்­கும் பிரச்­சி­னையைப் பார்க்­கும் போது மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது.

மேலும் இது போன்ற கொடூ­ரத்தை நான் என் வாழ்­நா­ளில் பார்த்­தது இல்லை. நூற்­றுக்­க­ணக்­கான கிரா­மத்­தி­னர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளுக்குச் சரி­யான தலைமை இல்லை. ஐக்­கிய நாடு­கள் நிறு­வ­னத்­து­டன் இணைந்து மக்­களைத் தங்­கள் சொந்த இடத்துக்குக் கொண்டு வர வேண்­டும்’’ என ஜோன்­சன் மேலும் தெரி­வித்­தார்.