Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வட­கொ­ரிய ஒலிம்­பிக் குழு­வின் முக­மூ­டி­யால் சர்ச்சை!!

தென்­கொ­ரி­யா­வில் குளிர்­கால ஒலிம்­பிக் தொடர் நடை­பெற்­று­வ­ரும் நிலை­யில், வட­கொ­ரி­யா­வில் இருந்து வந்­துள்ள ஒலிம்­பிக் குழு அணிந்த முக­மூ­டி­யால் கடும் சர்ச்சை ஏற்­பட்­டது.

குளிர்­கால ஒலிம்­பிக் போட்­டி­கள் தென்­கொ­ரி­யா­வின் பியோங்­யங் நக­ரில் நடந்து வரு­கின்­றது. பழைய பகை­களை மறந்து வட­கொ­ரி­யா­வும் தனது அணி­களை அனுப்­பி­யுள்­ளது.

இந்த நிலை­யில், கடந்த சனிக்­கி­ழமை நடந்த ஐஸ் ஹொக்கி ஆட்­டத்­தில் சுவிற்­சர்­லாந்து அணிக்கு எதி­ராக ஒருங்­கி­ணைந்த கொரிய அணி மோதி­யது.

அப்­போது, அணியை உற்­சா­கப் ப­டுத்த வட­கொ­ரி­யா­வில் வந்­தி­ருந்த பிரத்­தி­யேக குழு, வட­கொ­ரியா எனும் நாட்டை உரு­வாக்­கி­ய­வ­ரும், தற்­போ­தைய அதி­பர் கிம் ஜோங் உன்­னின் தாத்­தா­வு­மான கிம் இல் சங்­கின் உருவம் பொறிக்கப்பட்ட முக­மூ­டியை அணிந்­தி­ருந்­த­னர்.
இந்த விவ­கா­ரம் தற்­போது பூதா­ர­க­ர­மாக வெடித்­துள்­ளது. இது தொடர்­பில் பல்­வே­று­பட்ட கருத்­துக்­கள் வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.