Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ரஷ்ய வானூர்தி விபத்­துத் தொடர்­பில் விசா­ர­ணை­கள் துரித கதியில்

ரஷ்ய வானூர்­தி­யொன்று கடந்த ஞாயிற்­றுக் கி­ழமை விபத்­துக்­குள்­ளா­ன­தில் 71 பேர் உயி­ரி­ழந்­த­னர். இந்த விவ­கா­ரம் தொடர்­பில் விசா­ர­ணை­ களை நடத்­தி­வ­ரு­கி­றது ரஷ்யா. மீட்பு பணி­க­ளுக்­காக 400இற்­கும் மேற்­பட்ட ஊழி­யர்­க­ளும், 70 வாக­னங்­க­ளும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சம்­பவ இடத்­தில் கடும் பனிப்­பொ­ழிவு நில­வு­வ­தால் மீட்­புப் பணி­கள் மந்­த­மா­கவே நடந்து வரு­கின்­றன. விபத்­தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உடல்­கள் அடை­யா­ளம் காண­மு­டி­யா­த­படி கருகி உள்­ளன.

வானூர்­தி­யின் கறுப்­புப் பெட்டி மீட்­கப்­பட்­டுள்­ள­ து­டன், விபத்­துக்­கான கார­ணம் குறித்த விசா­ர­ணை­யும் தொடங்கி உள்­ளது. பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் உள்­ளிட்ட பல கோணங்­க­ளில் விசா­ர­ணை­கள் நடை­பெற்று வரு­கின்­றன.