Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பூனை­க­ளின் காவ­லர்!

நியூ­யோர்க்­கில் வசிக்­கும் கிறிஸ் அர்­செ­னாட், வீட்­டி­லேயே பூனை­கள் சர­ணா­ல­யத்தை அமைத்­தி­ருக்­கி­றார். ஓய்­வு­பெற்ற ரயில்வே ஊழி­ய­ரான 58 வயதுடைய இவர், பூனை­களை வளர்ப்­ப­தற்கு நெகிழ்ச்­சி­யான கார­ணம் இருக்­கி­றது.

2006ஆம் ஆண்டு இவ­ரது மகன் எரிக், 24 வய­தில் விபத்­தில் இறந்து போனார். அதில் மிக­வும் உடைந்து போனார் கிறிஸ். மகன் மறைந்து 2 மாதங்­க­ளா­கி­யும் துய­ரத்­திலி­ ருந்து மீள முடி­ய­வில்லை. ‘ரயி­லில் ஒரு ட்ரிப் முடித்த பிறகு விரக்­தி­யாக நிலை­யத்­தில் அமர்ந்­தி­ருந்­தேன். அப்­போ­து­தான் தண்­ட­வா­ளங்­க­ளில் சில பூனை­கள் சுற்­றிக் கொண்­டி­ருந்­த­தைக் கண்­டேன்.

இப்­ப­டிப் பல வரு­டங்­க­ளாக பூனை­க­ளைப் பார்த்­தி­ருந்­தா­லும் அன்று ஏனோ புதி­தா­கத் தெரிந்­தது. என் மகனே பூனை­க­ளாக மாறி­ய­து­போல் தோன்­றி­யது. வேக­மா­கச் சென்று பூனை­க­ளைத் தூக்­கி­னேன். உண­வ­ளித்­தேன். பிறகு தின­மும் அந்த ரயில் நிலை­யத்­துக்கு சென்று உண­வ­ளித்­தேன்.

ஒரு­கட்­டத்­தில் என் வர­வுக்­காக பூனை­கள் காத்­தி­ருக்க ஆரம்­பித்­தன. விடு­முறை நாட்­க­ளில் பூனை­கள் ஏமாற்­றம் அடைந்­து­வி­டும் என்று வருத்­த­மாக இருந்­தது. சில பூனை­கள் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்­த­தைக் கண்­டேன். இப்­ப­டியே விட்­டால் அவை இறந்­து­வி­ட­லாம். உடனே 20 பூனை­க­ளை­யும் வீட்­டுக்கு அழைத்து வந்­து­விட்­டேன்.

பூனை­க­ளுக்கு மருத்­து­வம் பார்த்­தேன். ஆரோக்­கி­ய­மான உண­வு­களை அளித்­தேன். நானும் என் மனை­வி­யும் பூனை­கள் வந்­த­து­மு­தல் மிக­வும் பர­ப­ரப்­பாக இருந்­தோம். எங்­கள் மகன் பற்­றிய துன்­பம் கொஞ்­சம் கொஞ்­ச­மா­கக் கரைந்து போனது. 12 ஆண்­டு­க­ளில் பூனை­கள் குட்டி போட்­ட­தால் எண்­ணிக்கை அதி­க­மா­கி­விட்­டன. சாலை­க­ளில் ஆத­ர­வின்றித் திரி­யும் பூனை­கள், விலங்­கு­கள் மையத்­தில் வளர்க்க முடி­யாத பூனை­கள் எல்­லாம் எங்­க­ளி­டம் வந்து சேர்ந்­தன. இத­ னால் சுமார் 300 பூனை­கள் எங்­கள் வீட்­டில் சேர்ந்­து­விட்­டன’ என்­கி­றார் கிறிஸ்.