கட்சியைப் பதிவு செய்கிறார் கமல்!!

தனது கட்சியின் பெயரை நாளை மறுநாள் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்கிறார் நடிகர் கமல்ஹாசன். கட்சியைப் பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் அவர் நேரம் கேட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். முன்னதாக பெப்ரவரி 21 ஆம் திகதி அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதாக கமல் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like