Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கு!!

குளவி கொட்டுக்கு இலக்காகிய 12 பெண் தொழிலாளர்கள் டிக்கோயா கிழங்கன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் நேற்று கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகினர்.

குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலை மரம் ஒன்றில் இருந்த குளவியை கழுகு தாக்கியது எனத் தெரிவிக்கப்பட்டது.