Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பேருந்து வான் விபத்து- எழுவர் காயம்!!

திருக்கேதீஸ்வரத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று மதியம் நடந்தது. வவுனியாவிலிருந்து கற்பகபுரம் பகுதிக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது விபத்து நடந்தது.

பேருந்திலிருந்த மூவரும் , வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் விபத்தில் காயமடைந்தனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.