Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஒரே பாடலில் பிரபல்யமான பிரியா வாரியார்

ஒரே பாடல் மூலம் லட்சக் கணக்கான இரசிகர்களைப் பெற்று மலையாள நடிகை பிரியா வாரியார் சமூக வலைத்தளங்களில் இடம் பிடித்துள்ளார்.

 

விரைவில் திரைக்கு வரவுள்ள `ஒரு ஆடர் லவ் ’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள, “மாணிக்க மலராய பூவி” என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடல் வெளியான சில நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் அதில் நடித்த பிரியா வாரியார் கீச்சகத்தில் 1.94 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாடலில் 2 நிமிடங்களுக்கும் குறைவாக இடம்பெறும் பிரியா வாரியர் தான் கண்ணசைவில் லட்சக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். புருவத்தை அசைத்து ஒரு கண்வெட்டில் காதலைச் சொல்லும் அந்த காட்சி தான் இளைஞர்களின் நெஞ்சங்களில் நிறைந்து, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

கடந்த வருடம் `ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாள பாடல் இந்தியா முழுவதும் வைரலானது. அதைத்தொடர்ந்து தற்போது `மாணிக்க மலராயா’ என்ற பாடல் ஹிட் அடித்திருக்கிறது. ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு இசையமைத்த ஷான் ரஹ்மான்தான் இந்த பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.