Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

டிடி யின் காதலர் தின ஷ்பெஷல்!!

டிடி, டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள உலவிரவு பாடல் வீடியோ காதல் தினத்திற்கேற்ற பரிசாக அமைந்துள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் தனது ஒன்றாக ஒரிஜினல்ஸ் மூலம் உலவிரவு பாடல் வீடியோவை தயாரித்துள்ளார்.

பிரபல ரிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி, மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோர் காதலர்களாக நடித்துள்ளனர். இந்த உலவிரவு பாடல் வீடியோ காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டுள்ளது.

மென்மை மதன் கார்க்கி எழுதிய உலவிரவு பாடலை கார்த்திக் பாடியுள்ளார். இந்த வீடியோவில் காதலை மிகவும் மென்மையாகவும், நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள். டிடி உலவிரவு பாடல் வரிகள், இசை ஆகியவை அருமையாக உள்ளது.

டிடியும், டொவினோ தாமஸும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். காட்சி அமைப்பு எளிமையாக, இனிமையாக உள்ளது. உலவிரவு வீடியோவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. டிடியைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். இதனால் கௌதம் மேனன், டிடி, டொவினோ உள்ளிட்ட உலவிரவு குழு மகிழ்ச்சியில் உள்ளது.