Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு: ஐவர் காயம்!!

கொழும்பு கிராண்ட்பாஸில் சற்றுமுன்னர் இடர்

கட்டடம் இடிந்து விழுந்ததில்ஏழு பேர்  உயிரிழந்ததுடன், ஐவர் படுகாயமடைந்தனர். இந்த இடர் கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் பாபாபுள்ளே பிளேஸ் பகுதியில் நடந்தது.

காயமடைந்தவர்களிர் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் இடம்பெறுகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினருடன் 8 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.