Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வாக்குச் சீட்டில் இதயம் வரைந்த வாக்காளர்கள்!!

உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை பல வாக்குச்சீட்டுகளில் புள்ளடிக்கு பதிலாக இதயங்கள் வரையப்பட்டிருந்தன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சிகள் தத்தமது கட்சிகளுக்கு புள்ளடியிடுமாறு மக்களை வலியுறுத்திய நிலையில், எந்தவொரு கட்சியும் வாக்குச்சீட்டில் புள்ளடியிடுவது தொடர்பில் தெளிவுப்படுத்த தவறியுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மொழித் தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறையே தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.