Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!!

இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

வடக்கச்சி பத்து வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண் வீட்டிற்கு பின்புறமாக இறந்த நிலையில் சடலமாக
மீட்கப்பட்டார். அவருக்கு ஏழு வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் உள்ளனர். கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.