Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இலங்கையில் இப்படியும் ஒரு வங்கி!!

முற்று முழுதாக பணியாளரின்றி 100 சதவீதம் டிஜிற்றல் தொழில் நுட்பத்தில் இயங்கும் பீ.ஓ.சி டிஜி வங்கி இலங்கையில் முதன் முதலாக கண்டியில் திறந்து வைக்கப்பட்டள்ளது.

இலங்கை வங்கியின் தலைவர் ரொனால்ட் சீ பெரேரா, பொது
முகாமையாளர் டி.எம்.குனசேக்கர, சந்தைப் படுத்தற் பிரிவு பிரதி பொது முகாமையாளர் சேனரத் பண்டார, மத்திய மாகாண பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.பி.எஸ் ராஜபக்ச, கண்டி சிட்டி சென்றர் நிறுவன அதிபதி துசித ஜயமான ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வங்கியைத் திறந்து வைத்தனர்.

”இது இலங்கை வங்கியின் ஒரு கிளை என நினைத்தால் அது தவறானதாகும். இது ஒரு தனி வங்கியாகும். இதில் அனைத்து பணிகளும் டிஜிற்றல் தொழில் நுட்பத்தைக் கொண்டதாக இருக்கும். இங்கு வங்கி ஊழியர்கள் வரவேற்பதற்கும், பாதுகாப்பு அதிகாரிகள் உதவி செய்வதற்கும் மட்டுமே பணியமர்த்தப்பட்டள்ளனர். வாடிக்கையாளர்களெ தமது தேவைகளை சுயமாக மேற்கொள்ள முடியும். பொதுவாக வங்கிகளில் வங்கி அதிகாரிகள் இருப்பார்கள்.
வழமையான கருமங்கள் இடம் பெறும். மேலதிகமாக ஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணவைப்பு மற்றும் மீளப் பெறல், காசோலை மாற்றீடு என்பன இடம் பெறுவது வழமை. ஆனால் மேற்படி பீ.ஓ.சி டி.ஜி வங்கி அப்படியல்ல அனைத்து செயன் முறையும் வாடிக்கையாளரே
மேற்கொள்ள வேண்டும். ” என்று இலங்கை வங்கியின் தலைவர் ரொனால்ட் சீ பெரேரா தெரிவித்தார்.