மன்னார் இளைஞரை காணவில்லை!!

மன்­னார் தேட்­ட­வெளி ஜோச­வாஸ் நக­ரைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் கடந்த 14ஆம் திகதி முதல் காணா­மல் போயுள்­ளார் என இளை­ஞ­னின் பெற்­றோர் மன்­னார் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.

மன்­னார் விடத்­தல் தீவைப் பிறப்­பி­ட­மாகவும், தேட்­ட­வெளி ஜோச­வாஸ் நகரை வதி­வி­ட­மா­க­வும் கொண்ட பூபா­ல­சிங்கம் அருள்­ராஜ் (வயது 33) என்ற இளை­ஞரே காணா­மல் போயுள்­ளார் என கடந்த திங்­கட் கி­ழமை மன்­னார் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

குறித்த இளை­ஞன் சற்று மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வர் என­வும் இளை­ஞன் தொடர்­பில் தக­வல் தெரிந்­த­வர்­கள் அரு­கில் உள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கு தக­வல் வழங்­கு­மா­றும் பெற்­றோர் தெரி­வித்­துள்­ள­னர்.

You might also like