ஆதரவு தர முன்வரும் தமிழ் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேசும்

உள்­ளூ­ராட்சி சபை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு வழங்க முன்­வ­ரும் தமிழ்க் கட்­சி­க­ளு­டன் பேச்சு நடத்­து­வது என்று, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் நேற்று முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கட்­சித் தலை­வர்­கள் கூட்­டம், கொழும்­பில் நேற்று மாலை 5.30 மணி தொடக்­கம் 6.30 மணி வரை நடை­பெற்­றது.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், கட்­சி­யின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா, ரெலோ அமைப்­பின் தலை­வர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன், செய­லர் ந.சிறி­காந்தா, புளொட் அமைப்­பின் தலை­வர் த.சித்­தார்த்­தன், ராக­வன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 40 சபை­க­ளில் அதி­கூ­டிய ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்ட கட்­சி­யாக உள்­ளது. இந்­தச் சபை­க­ளில் மக்­கள் விரும்­பி­ய­வாறு ஆட்சி நிர்­வா­கங்­களை எப்­படி முன்­னெ­டுத்­துச் செல்­வது என்­பது தொடர்­பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

ஏனைய கட்­சி­க­ளின் ஒத்­து­ழைப்­பு­ட­னேயே சபை­க­ளின் நிர்­வா­கத்தை கொண்டு நடத்த முடி­யும் என்று கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஈ.பி.டி.பி. மற்­றும் தமிழ் மக்­கள் விடு­த­லைப் புலி­கள் கட்­சி­யு­டன் பேச்சு நடத்­தக் கூடாது என்று, கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஒவ்­வொரு சபை­க­ளி­லும் உள்ள நில­மை­களை, ஏனை­யோர் இரா.சம்­பந்­த­னுக்கு எடுத்­துக் கூறி­யுள்­ள­னர். இதன் பின்­னர், கூட்­ட­மைப்பு ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு தெரி­விக்­கும் கட்­சி­க­ளு­டன் பேசு­வது என்ற முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆட்சி அமைக்க ஆத­ரவு கோரி எந்­தக் கட்­சி­க­ளு­ட­னும் பேசு­வ­தில்லை என்­றும், ஆனால் கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் தமிழ்க் கட்­சி­க­ளு­டன் சபை­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு மாத்­தி­ரம் பேச்சு நடத்­து­வது என்று நேற்­றைய கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like