விண்வெளியில் உருவாகிறது புதிய நாடு

விண்வெளியில் ஒரு புதிய நாடொன்றை உருவாக்க ரஷியாவைச் சேர்ந்த கணினி விஞ்ஞானியும், ஏரோஸ்பேஷ் இன்டர்நே‌ஷனல் ஆய்வு மைய தலைவருமான மருத்துவர் இகோர் அசுர்பெய்லி திட்டமிட்டுள்ளார்.

இப் புதிய நாட்டில் குடியேற 5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதுடன் அவர்களில் 2 லட்சம் பேர் விண்வெளியில் குடியேற அனுமதி சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். விண்வெளியில் உருவாகும் இந்தப் புதிய நாட்டுக்கு அஸ்கார்சியா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் உருவாகும் புதிய நாடான அஸ்கார்சியா குறித்த அறிவிப்பை 2016 ஆ ம் ஆண்டு மருத்துவர் இகோர் அசுர்பெய்லி அறிவித்தார். இந்த நாட்டில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இவ் அறிவித்தலைத் தொடர்ந்து 20 நாள்களில் சுமார் 200 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் விண்வெளியில் உருவாகும் இந்த புதிய நாட்டில் குடியேற விண்ணப்பம் செய்திருந்தனர்.

உருவாகப் போகும் இந்த புதிய நாடு தொடர்பில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் அதற்கான அடிக்கல்,20 செ.மீ. நீளம் 2.3 கிலோ எடை கொண்ட ரொட்டி போன்ற அமைப்பில் காணப்படும் அகார்சியா-1 என்ற மைக்ரோ செயற்கை கோள் மூலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like